வல்லநாட்டில் காசநோய் விழிப்புணர்வு தேசிய ஊட்டசத்து முகாம்

வல்லநாட்டில் காசநோய் விழிப்புணர்வு தேசிய ஊட்டசத்து முகாம் நடந்தது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல் மற்றும் துணை இயக்குனர் மருத்துவப் பணிகள்( காசநோய்)டாக்டர் சுந்தரலிங்கம் அறிவுறுத்தலின் பேரில் திருத்தியமைக்கப்பட்டதேசிய காசநோய் தடுப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக செப்டம்பர் மாதம் முழுவதும் காசநோய் விழிப்புணர்வு தேசிய ஊட்டச்சத்து முகாம் கள் நடந்து வருகிறது.
கருங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மு.சுந்தரி மேற்பார்வையில் நடத்தப்பட்டது. இதனடிப்படையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி மொழித் திட்ட பணியாளர்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய ஊட்டச்சத்துமுகாம் வல்லநாட்டில் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி, சித்த மருத்துவ மருந்தாளுநர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். முதுநில சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா அனைவரையும் வரவேற்றார்.முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பணித்தளபொறுப்பாளர் முருகம்மாள் நன்றி கூறினார். மருத்துவ மனை பணியாளர் வேம்பன், உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சித்த மருத்துவ பிரிவு இணைந்து செய்திருந்தது.