கல்லூரி மாணவருக்கு 15 ஆயிரம் நஷ்ட ஈடு தர செல்போன் கடைக்கு நெல்லை நீதிமன்றம் உத்தரவு

கல்லூரி மாணவருக்கு 15 ஆயிரம் நஷ்ட ஈடு தர செல்போன் கடைக்கு நெல்லை நீதி மன்றம் அதிரடி உத்தரவு வழங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் ரயில்வே ஸ்டேஷன் தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் அபிஷ்விக்னேஷ்(22). இவர் நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இதழியல் துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டபடிப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 22.07.2016 அன்று நெல்லை சந்திப்பு பராசக்தி பில்டிங்கில் உள்ள தி சென்னை மொபைல்ஸ் கடையில் 11,390 ரூபாய் செல் போன் ஒன்று வாங்கி யுள்ளார் . அப்போது கடைகாரர் 1,249 ரூபாய்க்கு ஆப்ஸ் ஒன்று உள்ளது. அந்த ஆப்ஸ் இருந்தால் தொலைத்த போனுக்கு மற்றொரு போன் கிடைக்கும் என கூறியுள்ளார். அதை பெற்று கொண்டார் அபிஷ்விக்னேஷ். எதிர்பாராத விதமாக அந்தப் போன்13.11.2016 அன்று தொலைத்து விட்டது. அதன் பிறகு அவர் போன் கடைகாரரை சந்தித்து அவர் ஏற்கனவே உறுதியளித்தபடி மாற்று போன் கேட்டார். ஆனால் கடைக்கார் சரியான பதில் கூறவில்லை. ஆகவே இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் வட்ட சட்ட பணிகள் குழுவில் அபிஷ்விக்னேஷ் புகார் செய்தார். அங்கு பல வாய்தாக்கள் வழங்கியும் கூட எதிர்மனுதாரர் வரவில்லை. தொடர்ந்து இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட ஆணைக்குழுவுக்கு மாற்றபட்டது. அங்கும் எதிர் மனுதாரர் ஆஜர் ஆக வில்லை. எனவே மாவட்ட ஆணைக்குழு பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை வழக்கறிஞர் துர்க்கை முத்து, குணா ஆகியோர் நடத்தினர். வழக்கை விசாரித்த திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் தேவதாஸ், உறுப்பினர் சிவன் மூர்த்தி, முத்துலெட்சுமி ஆகியோர் தி.சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தார், கல்லூரி மாணவர் அபிஷ்விக்னேஷ் நஷ்ட ஈடாக 10 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக 5 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டார்.
கல்லூரி மாணவர்களிடம் கவர்ச்சியாக விளம்பரம் செய்து பணத்தினை வசூலிக்கும் கடைகாரர்கள், பிரச்சனை என்றால் கைவிரிப்பது வாடிக்கையாகி விட்டது. எனவே இந்த தீர்ப்பு செல்போன் மூலமாக கவர்ச்சிகரமான திட்டத்தினை மக்கள் மத்தியில் கூறிவிட்டு பணம் பறித்துவிட்டு அதற்கு சரியான பதிலாளிக்காத செயலுக்கு முற்றுபுள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.