செய்துங்கநல்லூரில் கல்லூரி மாணவிகள் சார்பில் பேரணி

செய்துங்கநல்லூரில் தூய்மை இந்தியா வேண்டி கல்லூரி மாணவிகள் பேரணி மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தினர்.
பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் செய்துங்கநல்லூரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்புறவு பணி நடந்தது. கல்லூரி மாணவ மாணவிகள் தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றினர். அதோடு மட்டுமல்லமால் முக்கிய இடங்களில் மரக்கன்று நட்டனர். அதன் பின் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடந்தது . செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணியை இன்ஸ்பெக்டர் ரெகு ராஜன் துவக்கி வைத்தார். இந்த பேரணி செய்துங்கநல்லூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பஸ் நிலையத்தினை அடைந்தது. அதன் பின் அங்கு மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பிளாஸ்டிக் ஒழிப்பு , தூய்மை குறித்து விளம்பர பாதகை ஏந்தி கல்லூரி மாணவ மாணவிகள் சாலைகள் இருபுறமும் நின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பாளையங்கோட்டை புனித சேவரியார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரின்ஸி செய்திருந்தார்.