செய்துங்கநல்லூரில் பக்ரீத் பண்டிகை

செய்துங்கநல்லூரில் பக்ரீத் பண்டிகை நடந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அல் மஸ்ஜிதுன் நூர் பழைய பள்ளிவாசல் திடலில் வைத்து பக்ரீத் பெருநாள் சிறப்புத் தொழுகை நடந்தது. பள்ளிவாசல் இமாம் அப்துல் சமது தொழுகையை நடத்தினார். தவ்ஹீத் ஜமாத் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் சமீம் பெருநாள் குத்பா உரை நிகழ்த்தினார். 300க்கும்மேற்பட்ட பெண்களும் 200க்கு மேற்பட்ட ஆண்களும் கலந்துகொண்டனர் . ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அல் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் தலைவர் சாதிக், செயலாளர் வகாப், துணை தலைவர் வாசிம், துணை செயலாளர் கரீம் பாஷா, பொருளாளர் அப்துல் கனி, அப்துல் காதர், ஜாபர், வஸிமுல்லா சுஹைல், அல்தாப், நாவஸ், ஆபித் , சாலி, மஸ்தான், ஹனிபா உள்பட பலர் கலந்துகொண்டனர்.