இந்தியாவில் பழமையான மொழி தமிழ் மொழி   வழக்கு தொடர்ந்த  எழுத்தாளருக்கு  டெல்லி தமிழ் சங்கம் பாராட்டு

 இந்தியாவின் பழமையான மொழி தமிழ் மொழி என மதுரை நீதி மன்ற நீதி பதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். இதற்கு காரணம்  தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தொடர்ந்த ஆதிச்சநல்லூர் வழக்கு. இந்த வழக்கு தொடர்ந்த எழுத்தாளரை பல்வேறு  தமிழ் இனத்தினர் பாராட்டி வருகிறார்கள். தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்சனிலிசம் சார்பில் ‘ஆதிச்சநல்லூர் நாயகன்’ என்ற விருது வழங்கப்பட்டது. செய்துங்கநல்லூர் நூலகத்தின் சார்பில்  ‘அகழாய்வு நாயகன்’ என்ற விருது வழங்கப்பட்டது. தற்போது டெல்லியில் இருந்து வருகை தந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின்  நேர்முக உதவியாளரும், முன்னாள்  டெல்லி தமிழ் சங்க துணை தலைவரும்,   டெல்லி முத்தமிழ் பேரரவை தலைவருமான கே.வி.கே. பெருமாள் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, ஆதிச்சநல்லூர் நாகரீகம் மிகவும் பழமையான நாகரீகம் என்பது நிருபிக்கப்பட்டு இருப்பது உலக தமிழர்கள் அனைவருக்குமே பெருமை.    ஆய்வு அறிக்கை வெளியே வர காரணம் மதுரை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு, மனுதாரான எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆதிச்சநல்லூரில் 2004 ல் நடந்த ஆய்வுக்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும், மீண்டும்அகழாய்வு நடத்த வேண்டும்,  இங்கு கிடைத்த பொருள்களை உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வழக்கு தொடர்ந்தார். வழக்கறிஞர் டாக்டர் அழகு மணி மனுதாரர் சார்பில் ஆஜாரானார். இதை நன்கு விசாரித்த நீதி பதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அமர்வு அடுக்கடுக்காய் தமிழர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். இந்த வழக்குக்கு பிறகு 4 கோடி ரூபாயில் ஆதிச்சநல்லூரில் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. புறக்காவல் நிலையம் அமைக்கப் பட்டுள்ளது. இங்கு எடுத்த பொருள் புளோரிடா ஆய்வகத்துக்கு  அனுப்பப்பட்டு 2900 ஆண்டு பழமையானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பழமையான மொழி தமிழ் மொழிதான் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.  தமிழகத்தில் உள்ள 143 இடங்களில் காவலர்கள் நியமிக்க உத்தரவிட்டு உள்ளார்கள். அதோடு மட்டுமல்லாமல்  சமஸ்கிருதம் படித்தால் மட்டுமே தொல்பொருள் துறை யில் வேலை என்பதை மாற்றி  தமிழ் படித்தாலே வேலை எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளார்கள்.  ஆதிச்சநல்லூர் அருகில் உள்ள சிவகளையில் அகழாய்வு நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வரப்படுகிறது. விரைவில் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த  அருங்காட்சியகம் அமைக்கப்படும், மேலும் ஆய்வு தொடரும் என நம்புகிறோம் . உலக தமிழர்கள் தலை நிமிர இந்த வழக்கு தொடர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி, நீதியரசர்கள் கிருபாகரன், சுந்தர் ஆகியோரை டெல்லி தமிழ்சங்கம் சார்பில் பாராட்டுகிறேன். என்று அவர் கூறினார்.