செய்துங்கநல்லூரில் அமமுக வேட்பாளர் புவனேஸ்வரன் வாக்கு சேகரிப்பு

கருங்குளம் ஒன்றியத்தில் அமமுக வேட்பாளர் புவனேஷ்வரன் வாக்கு சேகரித்தார்.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் சுற்று பயணம் செய்தார். அவர் செய்துங்கநல்லூரில் துவங்கி , வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். 1 வது வார்டு பிள்ளையார் கோயில் தெரு, முஸ்ஸீம் தெரு, வி.கோயில் பத்து, மெயின் ரோடு, மூப்பனார்தெரு, நம்பிசாமி கோயில் தெரு, தென்னஞ்சோலை, சந்தையடியூர், எஸ்.என்.பட்டி, அய்யனார்குளம் பட்டி, மேல தூதுகுழி, கீழத்தூதுகுழி ஆகிய இடங்களில் அவர் வாககுசேகரித்தார்.

இவர் செய்துங்கல்லூர் நம்பிசாமி கோயில் தெருவில் பேசியதாவது, மத்தியில் ஆளும் மோடி அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களை தீட்டி வருகிறது. ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக கூறிய மோடி 15 ரூபாய் கூட போடவில்லை. கார்பரேட் கம்பேனிக்கு விலைபோய் விட்டது. இந்த அரசில் வேலைவாய்ப்பு இல்லை. வங்கியில் நம்மை வரிசையில் நிற்க வைத்தாரே தவிர மக்களுக்கு நன்மை செய்யவில்லை. அம்மா உயிரோடு இருககும் போது எந்தந்த திட்டங்கள் தமிழ் நாட்டுககு வரககூடாது என நினைத்தார்களோ அந்த திட்டத்தினையெல்லாம் தமிழகத்துககு கொண்டு வந்து விட்டார்கள். நீங்கள் என்னை ஆதரிககும் சமயத்தில் அண்ணன் டிடிவி தினகரன் கைகாட்டு நபரே பிரதமாராக வருவார் எனவே தமிழகத்துககு நன்மை கிடைகக காரணமாக அமையும்.எனவே எங்கள் கட்சிக்கு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

அவருடன் கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் முத்தையா, மாவட்ட சிறுபான்மை பிரிவு ஓ.பி. முஸ்தபா, பொதுககுழு உறுப்பினர் கொம்பையா, மாநில மருத்து அணி செயலாளர் கோசல்ராம், செய்தி தொடர்பு முருகன், எஸ்.டி.பி கட்சி , பாப்புலர் ஆப் இந்தியா நிர்வாகிகள் உள்பட பலர் உடன் சென்றனர். கருங்குளம், தாதன்குளம், தெற்கு காரசேரி, அரசர்குளம், இராமனுஜம்புதூர், சேரகுளம், கால்வாய் உள்பட கருங்குளம் ஒன்றிய பகுதியில் அவர் தொடர்ந்து வாககு சேகரித்தார்.