முத்தாலங்குறிச்சியில் சித்திரை விசு திருவிழா அம்மன் தாமிரபரணி ஆற்றில் நீராடல்

செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி ஸ்ரீ குணவதியம்மன் கோயிலில் சித்திரை விசுவை முன்னிட்டு அம்மன் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தமாடினார்.

முத்தாலங்குறிச்சியில் மிகவும் பழமையான ஆலயம் நல்லாண் பிள்ளை பெற்றவள் என்ற குணவதியம்மன். இந்த கோயிலில் சித்திரை விசு திருவிழா நடந்தது. இதையொட்டி முத்தாலங்குறிச்சி முக்குறுணி அரிசி பிள்ளையார் கோயிலில் இருந்து சீர் வரிசை பொருள்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதன் பின் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. அதன் பின் அம்மன் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தமாடினார். தொடர்ந்து கோயில் வளாகத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. அதன் பின் சப்பரத்தில் அம்மன் கோயிலை மூன்று முறை வலம் வந்தார். இதில் கட்டளை தாரர் அங்கப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இளைஞர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் அர்ச்சகர்கள் சுந்தரம் , முருகன், சிவா, கல்யாணி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.