கிராமங்கள் தோறும் அடிப்படை வசதிகள் கிடைக்க தாமரைக்கு வாககளியுங்கள் கால்வாய் கிராமத்தில் தமிழசை வாக்கு சேகரிப்பு

கருங்குளம் ஒன்றிய பகுதியில் தூத்துக்குடி பி.ஜே.பி. வேட்பாளர் தமிழிசை சௌந்தர ராஜன் கிராமங்கள் தோறும் சென்று வாக்கு சேகரித்தார்.

இவர் கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, கருங்குளம், தாதன்குளம், தெற்கு காரசேரி, சேரகுளம், இராமனுஜம்புதூர், அரசர்குளம், கிளாக்குளம், வல்லகுளம், கால்வாய் , திருவரங்கப்பட்டி உள்பட பல இடங்களில் வாக்கு சேகரித்தார்.

இவர் கால்வாய் கிராமத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து பேசினார். அவர் பேசியதாவது. நான் வெளிநாட்டில் படித்து டாக்டர் பட்டம் பெற்று மருத்துவ பணி செய்து வந்தவள். எனது தந்தை குமரி அனந்தன் இந்த பகுதியில் எம்.எல்.ஏ வாக பணியாற்றியவர். காமராஜருடன் பயணித்தவர். அவர்களை பார்த்து நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறேன்.

தற்போது நான் பி.ஜே.பி. மாநில தலைவராக உள்ளேன். எங்கள் கட்சி தற்போது அதிமுகவோடு இணைந்து போட்டியிடுகிறது. இந்த பகுதியில அ.தி.மு.க எம்.எல்.ஏ வாக இருந்து சண்முகநாதன் 1 கோடியே 65 லட்சம் செலவில் இந்த கிராமத்தில் பள்ளி கூட கட்டிடம் அரசு சார்பில் கட்டி தந்துள்ளார். அதுபோல பல சேவைகளை நாங்கள் இணைந்து செய்வோம். வருகிற 2010 க்குள் அனைவருக்கும் இலவசமாக வீடு கட்டி தர பாரத பிரதமர் மோடி திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார்கள். பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா தர அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தினை 200 நாள் வேலை வாய்ப்பு திட்டமாக மாற்ற அனைத்து ஏற்பாடுகளும் எடப்பாடியாரும், மோடியாரும் செய்து வருகிறார்கள். கிராமங்கள் தோறும் அடிப்படை வசதிகள் அனைத்துமே செய்து தர நடவடிக்கை எடுப்போம் என அவர் பேசினார்.

அவருடன் சண்முகநாதன் எம்.எல்.ஏ , முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், முன்னாள் சேர்மன் ஆறுமுக நயினார், அய்யாதுரை பாண்டியன், சேகர், கனகராஜ், கேசவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.