தூத்துக்குடியில் இயக்குநர் கெளதமன் போட்டி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக, தமிழ் பேரரசு கட்சித் தலைவரும் திரைப்பட இயக்குநருமான வ. கெளதமன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி எம்பி போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் பாஜக தலைவர் தமிழிசை போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக, தமிழ் பேரரசு கட்சித் தலைவரும் திரைப்பட இயக்குநருமான வ. கெளதமன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பலர் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தங்களின் பிரதிநிதியாக போட்டியிட வேண்டும் என என்னைக் கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில், தூத்துக்குடியில் பல்வேறு அமைப்பினரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதுதொடர்பாக, இன்னும் ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆலோசனைக்குப் பிறகு தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஓரிரு நாள்களில் அறிவிப்போம். இதற்கு தமிழ் சமூகம் நிதியுதவி அளித்து உதவி செய்ய வேண்டும் என்றார் அவர்.