செய்துங்கநல்லூரில் பேக்கரியை சூறையாடிய மர்மநபர்கள்

செய்துங்கநல்லூரில் பேக்கரியை சூறையாடிய மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்துங்கநல்லூரில் புதியம்புத்தூரை சேர்ந்த சுரேஷ் என்பவருக்குசொந்தமான பேக்கரி உள்ளது. நேற்று மாலை 6 மணி அளவில் இங்கு விறுவிறுப்பாக விற்பனை நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் கடையை அடித்து நொறுக்கி அங்கிருந்த ஊழியர்களையும் தாக்கினர். பின் அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் செய்துங்கநல்லூர் போலிசார் அங்கு சென்று விசாரித்தனர். பின் தாக்குதல் நடத்தியது யார் . எதற்காக தாக்கினர். தப்பியோடியது யார் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.