இராமனுஜம்புதூரில் மாணவர்களுக்கு சீர்வரிசை வழங்கும் விழா

இராமானுஜம்புதூரில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நடந்தது.

முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கணபதி தலைமையில் பள்ளிக்கு தேவையான பொருட்களை ஊர்பொதுமக்கள் கல்வி சீர் வரிசையாக கொண்டு வந்தனர். இதில் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஒரு லட்சம் மதிப்புள்ள மதிப்புள்ள கண்காணிப்பு கேமரா, பேட்டரி, இன்வெட்டர், சேர், எல்.இ.டி டிவி, தலைவர்களின் படம் உள்பட பல பொருட்களை பள்ளிக்கு வழங்கினார்கள்.

இராமனுஜம்புதூரில் இருந்து மக் கள் ஊர்வலமாக வந்தனர் அதன் பின் பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி அவர்களிடம் பொருள்களை ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.