பொள்ளாச்சி சம்பவத்தினை கண்டித்து செய்துங்கநல்லூர் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் பொள்ளாச்சி சம்பவத்தினை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போரட்டம் நடத்தினர்.

நாட்டையே உலுக்கிய பரப்பான சம்பவமான பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடுள்ளது. இதற்கிடையில் கோ¬ வ மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 19 வயது மாணவியிடம் முக நூல் மூலம் பழகி, பாலியல் தொல்லை தந்து அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பணம் பறித்தாக பாதிக்கப்பட்ட ஒரு பெண், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த வழக்கில் நிதி நிறுவன அதிபர் திருநாவுகரசையும் நண்பர்கள் என்ஜினியர் சபரிராஜன், சதீஷ், வசந்த குமார், ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை மாவட்ட கலெக்டர் ராஜா மணி குண்டர் சட்த்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பெயரில் இவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் தமிழகம் எங்கும் இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல கல்லூரி மாணவர்கள் போரட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று காலை 9 மணிக்கு மாணவர்கள் உள்ளிருப்பு பேராட்டம் நடத்தினர். அவர்கள் கல்லூரி வாளகத்தில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். அவர்களிடம் செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ரெகு ராஜன், கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் அரை மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் அவர்கள் வகுப்புக்கு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.