ஆளும் கட்சி மத்திய அரசுக்கு காவடி எடுக்கிறது கனி மொழி எம்.பி தாக்கு

வல்லநாட்டில் ஆளும் கட்சி மத்திய அரசுககு காவடி எடுக்கிறது என கனிமொழி எம்.பி தாக்கி பேசினார்.கனிமொழி எம்.பி. கருங்குளம் ஒன்றியத்தில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்தகொண்டார். அவர் செக்காரக்குடி, வல்லநாடு, ஆழ்வார்கற்குளம் , கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை ஆகிய பகுதியில் சுற்று பயணம் செய்தார். வல்லநாட்டில் பல்வேறு மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். அதில் மிக முக்கிய மனுவாக குடிதண்ணீர் பிரச்சனையும், கழிவறை பிரச்சனையும், பேருந்து பிரச்சனையும், விளையாட்டு மைதான பிரச்சனையும், சுடுகாட்டுக்கு சாலை இல்லாத பிரச்சனையும், அகரம் கிராமத்துக்கு பாலம் இல்லாத பிரச்சனை குறித்தும் கூறப்பட்டது. இதில் அருணாசலம் என்ற மாணவர் தங்களது அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்களுக்கு கழிவறை வசதி இல்லை. அதோடு மட்டுமல்லாமல் சுற்று புறச்சுவர் இல்லாமல் உள்ளது என புகார் அளித்தனர்.

இந்த புகாரினை பெற்று கொண்ட கனிமொழி எம்பி. பேசினார் . அவர் பேசும் போது, நீங்கள் கூறுவதில் மிக அதிகமான பிரச்சனை உள்ளாட்சி தேர்தல் நடந்தாலே முடிந்துவிடும். அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தல் நடந்த பயந்து வருகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தாலே போதும் குடிதண்ணீர் பிரச்சனை தீர்ந்து விடும். மேலும் தூத்துக்குடி செல்லும் அனைத்து பேருந்துகளும் வல்லநாட்டில் நின்று செல்ல திமுக ஆட்சி வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் அவர்கள் பத்திரிக்கையில் மக்கள் குறை குறித்து செய்தி வந்தாலே போதும் உடனே அதிகாரிகளை போனில் கூப்பிட்டு உடனே அந்த பிரச்சனை முடித்து விடுவார். அதுபோலவே திமுகவில் உள்ள அனைவரும் செயல்படுவோம். இந்த ஊரில் மாணவன் ஒருவன் ஆண்கள் பயன்படுத்த பள்ளியில் கழிவறை இல்லை என பேசியுள்ளார். உண்மையிலேயே இது யோசிக்க வேண்டியது. அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் விளையாட்டு விளையாட திடல் அமைக்க ஏற்பாடு செய்யபடும்.

மேலும் தமிழகத்தில் ஆளும் அதிமுக மத்தியில் ஆளும் பிஜேபிக்கு காவடி தூக்கி வருகிறது. நீட் பிரச்சனையாக இருந்தாலும் சரி, ஸ்டெர்லைட் பிரச்சனையாக இருந்தாலும் சரி இதற்கெல்லாம் காரணம் அதிமுக தான். அவர்களை மன்னிக்கவே கூடாது. 3 இடத்திற்கு இடைத்தேர்தல் வரவில்லை என்றாலும் மற்ற சட்டமன்றத்திற்கு தேர்தல் வருகின்றது. வருகின்ற தேர்தலில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும்.அப்போது தமிழக பிரசனை அனைத்தும் தீரும். கன்னியாகுமரியில் ராகுல் பேசியது போலவே எங்கள் கூட்டணி ஆட்சி வந்தவுடன் ஜிஎஸ்.டி பிரச்சனையும் தீரும் என அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கு வெங்கட சுப்பு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மகராஜன் முன்னிலை வகித்தார். அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ வரவேற்றார். ஹெலன் டேவிட்சன், உமரிசங்கர், ஏ.டி.கே. ஜெயசீலன், சுப்பிரமணியன், பெருமாள், சண்முகம், இசக்கி பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.