பெண்ணை மோசடி செய்து விட்டு போலிசுக்கு டிமிக்கி கொடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கைது

பெண்ணை மோசடி செய்து விட்டு போலிசுக்கு டிமிக்கி கொடுத்த சேரகுளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவரை போலிசார் கைது செய்தனர்.

கருங்குளம் ஒன்றியம் சேரகுளம் பஞ்சாயத்து தலைவராக கடந்த இரண்டு முறை பணியாற்றியவர் புங்கன்(45). இவர் பஞ்சாயத்து தலைவராக இருந்த போது சேரகுளம் சுப்பிரமணியபுரம் சேசு அந்தோணி மனைவி லைலா பர்வீன் (43) என்பவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக 8 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்க பணம் பெற்று கொண்டார்.

ஆனால் அவருக்கு வேலையும் வாங்கி தரவில்லை. வாங்கிய பணத்தினை திருப்பியும் கொடுக்க வில்லை. எனவே கடந்த 11.07.2008 அன்று அவர் மதுரை உயர்நீதி மன்றத்தின் ஆணை பெற்று சேரகுளம் போலிசில் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் புங்கன் மதுரை உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். ஜமீனின் தேதி முடியும் போது வாய்தா வாங்கி அவர் போலிசுக்கு டிமிக்கி கொடுத்து வந்தார். இதற்கிடையில் வாய்தா தேதி முடிவடைந்த நிலையில் அவர் போலிசில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சகாய ஜோஸ் , செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், சேரகுளம் சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் புங்கனை சேரகுளத்தில வைத்து கைது செய்தனர். புங்கன் கருங்குளம் வட்டார த.மா.கா வின் முன்னாள் தலைவர், அதன் பின் ரஜினி கட்சியில் பணியாற்றி வந்தார். தற்போது மீண்டும் காங்கிரஸில் இணைந்திருந்தார். புங்கன் இதுபோல் பலரை வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாகவும், அவர்கள் இவர் மீது புகார் வழங்க தாயராகி வருகின்றனர். 11 வருடங்களாக போலிசுக்கு டிமிக்கி கொடுத்த புங்கன். இரண்டு தடவை பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மக்களை ஏமாற்றி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.