தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி

கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி. தற்போது, இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ளார். இவர் தமிழக அரசியல் தலைவர் மு. கருணாநிதியின் மகள் ஆவார். இதழியல், இலக்கியத் துறைகளிலும் கனிமொழிக்கு ஆர்வம் இருந்து வந்திருக்கின்றது.
மு. கருணாநிதிக்கும் அவரது மூன்றாவது மனைவி ராஜாத்திக்கும் 1968ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கனிமொழி. பள்ளிப் படிப்பை சர்ச் பார்க்கிலும் பெரிசண்டேஷன் கான்வன்டிலும், வணிகவியலில் முதுகலைப் பட்டத்தை எத்திராஜ் கல்லூரியிலும் கனிமொழி பயின்றார். 1989ஆம் ஆண்டு அத்திபன் போஸ் என்பவரை மணந்தார். இத்திருமண வாழ்க்கை மண முறிவில் முடிய, ஆகஸ்டு 21, 1997 அன்று அரவிந்தன் என்பவரை மறுமணம் புரிந்தார். இவருக்கு ஆதித்யா என்று ஒரு மகன் உள்ளார்.
சங்க இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட இவர், பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். இந்திய உள்துறை முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து கருத்து என்னும் இணைய தளத்தை நடத்தி வருகிறார்.
தி இந்து நாளிதழில் துணை ஆசிரியராக தொடக்க காலத்தில் பணியாற்றினார். தமிழ் முரசு, குங்குமம் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றிய இவர் 2007ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்னும் கலை, பண்பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கினார். ஈழ இனப் படுகொலைக்கு எதிராக அவ்வப்பொழுது குரல் கொடுத்து வந்த கனிமொழி, குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராகவும் உள்ளார்.
2007 சூலை இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்ட இவரது பதவிக்காலம் 2013ம் ஆண்டு முடிவடைந்தது.
2 ஆம் தலைமுறை அலைவரிசை (“2ஜி’ ஸ்பெக்ட்ரம்) முறைகேடு வழக்கில்  குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதால் கனிமொழி,  விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு கூறினார்.
இவரது கவிதைத் தொகுப்புகள் கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி