அரசர்குளத்தில் ரேசன்கடை அமைககப்படும் சண்முகநாதன் எம்.எல்.ஏ உறுதி அளித்து பிரச்சாரம்

அரசர்குளத்தில் ரேசன்கடை அமைக்கப்படும் என சண்முகநாதன் எம்.எல்.ஏ உறுதி அளித்து பிரச்சாரம் செய்தார்.

கருங்குளம் அருகில் உள்ள அரசர்குளத்துக்கு தனி ரேசன்கடை அமைக்க வேண்டும் என தேர்தலை புறக்கணித்து இருந்தனர். இதற்கிடையில் சண்முகநாதன் எம்.எல்.ஏ அவர்களது கூட்டணி பி.ஜே.பி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அரசர்குளம் வந்தார். அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அவர் மக்களிடையே பிரச்சாரம் செய்தார்.

அப்போது பெண்கள் அரசர்குளம் தனி ரேசன் கடை குறித்து அவரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த பிரச்சனையை தீர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறேன். தேர்தல் முடிந்தவுடன் ரேசன் கடை அமைக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். அதன் பின் அவர் அந்தகிராமத்தில் அதிமுக கட்சி காரர்கள் வீட்டில் நடந்த திருமணத்துக்கு சென்று மணமக்களை ஆசிர்வதித்தார். அவருடன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருபாற்கடல், பிரமையா, மாயாண்டி, புதுக்குளம் வெள்ளையன் உள்பட பலர் வந்தனர்.