செய்துங்கநல்லூர் பிரகாசியம்மாள் ஆலய அர்ச்சிப்பு

செய்துங்கநல்லூரில் புதுப்பிக்கப்பட்ட புனித பிரகாசியம்மாள் ஆலய அர்ச்சிப்பு விழா நடந்தது.

இதையொட்டி மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் டாக்டர் இவோன் அம்புரோஸ் அவர்களை மக்கள் வரவேற்று ஊர்வலமாக அழைத்து சென்றனர். அதன்பின் 6 மணிக்கு ஆலயத்துக்கு அர்ச்சிப்பு நடந்தது.

அதன் பின் தூத்துக்குடி மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் டாக்டர் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து இரவு திருவிருந்து நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஆரோக்கிய லாசர் தலைமையில் ஆலய திருப்பணிக்குழு, அருட் சகோதரிகள், திருத்தல பங்கு மக்கள் செய்திருந்தனர்.