மேலசெக்காரக்குடி சமையலர் குடும்பத்துக்கு அரசு நிதி உதவி

கருங்குளம் ஒன்றியம் மேலசெக்காரக்குடி கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சமையலளராக பணிபுரிந்தவர் செல்வி. இவர் அகால மரணமடைந்தார்.

இவர் ஈமச்சடங்கிற்கான உதவி தொகை 25 ஆயிரத்தினை கருங்குளம் ஒன்றியம் மூலம் வழங்கப்பட்டது. ஒன்றிய ஆணையாளர் பாலசுப்பிரமணியன் இந்த தொகையை வழங்கினார். அவருடன் சத்துணவு எழுத்தர் முருகன், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உலகு , முருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், சத்துணவு ஊழியர்கள் துரைப்பாண்டியன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.