கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் சாலைப்பாதுகாப்பு பயிற்சி முகாம்

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.

கல்லூரி முதல்வர் இறைவன் அருட்கனி அய்யநாதன் தலைமை வகித்தார். முதலாம் ஆண்டு மாணவி அஞ்சனா வரவேற்றார். தமிழ்நாடு அரசு போககுவரத்து கழக திருநெல்வேலி மண்டல வணிக துணை மேலாளர் சமுத்திரம், தூத்துககுடி போககுவரத்து கிளை மேலாளர் கண்ணன் , துணை மேலாளர் பழனியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் இராஜாபாபு நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நடத்தப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் அகிலா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
====