ஆதிச்சநல்லூரை தெற்கு கள்ளிகுளம் மாணவர்கள் பார்வையிட்டனர்.

ஆதிச்சநல்லூரில் தெற்கு கள்ளிகுளம் தெட்சணமாறநாடார் சங்க கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்.

தெற்கு கள்ளிகுளம் தெட்சணமாற நாடார் சங்க கல்லூரி தமிழ் துறை மாணவர்கள் ஆதிச்சநல்லூரை ஆய்வு செய்ய வந்தனர். இவர்கள் ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடந்த இடம், கம்பி வேலி அமைக்கும் இடம் உள்பட பல இடங்களை பார்த்தனர். இவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கம் அளித்தார்.

ஆதிச்சநல்லூரை ஆய்வு செய்த மாணவி கௌசல்யா கூறும் போது, “ஆதிச்சல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில் என போற்றப்படுகிறது. எனவே அதை காணும் ஆர்வத்துடன் இங்கே வந்தோம். ஆய்வு நடந்த இடத்தினை பார்வையிட்டோம். இங்கு கிடைத்த முதுமக்கள் தாழிகள் சென்னையிலும், பாளையிலும் உள்ளது என கூறுகிறார்கள். அதை பார்வையிட நாங்கள் மீண்டும் பயணம் செய்ய வேண்டியது உள்ளது. எனவே இவ்விடத்தில் அருங்காட்சியம் அமைத்தால் மிக்க உதவியாக இருக்கும்” என்றார். தமிழ் துறை தலைவர் கிரிஜா வெட்டேஷ் தலைமையில் சோன கிருஷ்டி, சுமித்திரா தேவி ஆகியோர் உடனிருந்தனர்.

அதன் மாணவர்கள் பாளை கிருஷ்ணாபுரம் கலை சிற்பங்களையும் ,பாளை அருங்காட்சியத்தினையும் பார்வையிட்டனர். பாளை அருங்காட்சியகத்தில் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி மாணவர்களுக்கு அருங்காட்சியகத்தினை காட்டி விளக்கம் அளித்தார்.