குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பிப்.1ஆம் தேதி தொடங்குகிறது : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பிப்.1ம் தேதி தொடங்குகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தொகுதி 1 பணியில் 139 அடங்கிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 03.03.2019 அன்று நடைபெற உள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள 01.02.2019 முதல் 28.02.2019 வரை (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர) அனைத்து வேலை நாட்களிலும் மாலை 4.00 மணிமுதல் 7.00 மணிவரை நமது மாவட்டத்தில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் (புதிய முகவரி : ஆசிரியர் காலனி 1ம் தெரு, பாண்டியன் கிராம வங்கி பின்புறம்) நடைபெற உள்ளது.
எனவே, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1– தேர்விற்கு விண்ணப்பம் செய்திருந்து பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் மேற்படி மையங்களில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளுமாறும் மேலும் விபரங்கள் அறிய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு இவ் இலவச பயிற்சியில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.