தூத்துக்குடி மாவட்டத்தில் 14,02,300 வாக்காளர்கள்: பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்!!

தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் மொத்தம் 14,02,300 வாக்காளர்கள் உள்ளனர். 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். வாக்காளர் பட்டியலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 6,90,106 ஆண் வாக்காளர்களும், 7,12,098 பெண் வாக்காளர்களும், 96 இதர வாக்காளர்கள் என மொத்தம் 14,02,300 வாக்காளர்கள் உள்ளனர்.
இறுதி இறுதி வாக்காளர் பட்டியலில் 18 முதல் 19 வயதுடைய இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 608 பேர் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1593 உள்ளது. புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு Epic அட்டைகள் விரைவில் வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.