தேனியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தேரிககாட்டு ஜமீன்களின் வரலாறு நூல் அறிமுக விழா

முத்தாலங்குறிச்சி காமராசு எழுதி தி இந்து தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்ட தேரிககாட்டு ஜமீன்களின் வரலாறு என்னும் நூல் தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேரிககாடான தூத்துககுடி மாவட்டம் நட்டாத்தி , சாத்தான்குளம் பகுதியில் குறுநில மன்னராக வாழ்ந்து அவர்களின் சுவடுகளை மட்டும் விட்டு விட்டு மறைந்து விட்டனர். அதை தோண்டி துருவி எடுத்து, பலரிடம் அலைந்து திரிந்து வரலாற்றை சேகரித்து, நெல்லை தமிழில் பாட்டி கதைசொல்வது போல நூலாசிரியர் எழுதியுள்ளார். இந்த நூல் தமிழகமெங்கும் வெளியிடப்பட்டு வருகிறது.

தேனி மாவட்ட தேனியில் உள்ள தேனி நட்டாத்தி சத்திரிய குல இந்து நாடார்கள் உறவினர் முறை சார்பில் இந்த நூல் ஆனந்த் மகாலில் அறிமுகம் செய்யப்பட்டது. உறவின் முறை செயலாளர் கமலகண்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் குருசாமி முன்னிலை வகித்தார். தலைவர் மாரியப்பன் வரவேற்றார். தேரிககாட்டு ஜமீன் வரலாறு நூல் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னாள் செயலாளர் ரவி நூலை அறிமுகம் செய்தார். வழககறிஞர் கரம் சந்திரன் வாழ்த்தி பேசினார் . நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசுவை பாராட்டி கௌரவித்தனர்.

முன்னதாக தேனி பழைய பஸ்நிலையம் வசந்தம் ஹோட்டலில் வைத்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுககு தேனி தமிழ் சங்கம் சார்பில் வரவேற்பு அளிககப்பட்டது. தலைவரும் எழுத்தாளருமான தேனி சுப்பிரமணியன் தலைமை வகித்தார். திரைப்பட கவி-ஞர் கவி கருப்பையா முன்னிலை வகித்தார்.