பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவருக்கு விருது : தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

2018-2019ஆம் அண்டிற்கான உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபருக்கு விருது மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்படுகிறது இதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியுடையவர்கள் 31.12.2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
2018-2019ஆம் அண்டிற்கான உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தற்பொழுது தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபருக்கு அவ்வையார் விருது, ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் சால்வை வழங்கப்படும் என ஆணை பெறப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவர். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல்.
விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விபரம் 1 பக்க அளவில் தமிழ் (வானவில் அவ்வையார்) மற்றும் ஆங்கிலத்தில் (Soft Copy and Hard Copy) அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரரின் கருத்துரு (தமிழ்-1 மற்றும் ஆங்கிலம்-1) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உடன் இவ்வலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.12.2018 தகுதியுடையவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.மாவட்ட சமூகநல அலுவலர்,மாவட்ட சமூகநல அலுவலகம்,மாவட்ட ஆட்சியர் வளாகம்,கோரம்பள்ளம்,தூத்துக்குடி-628101 தொலைபேசி எண் 0461-2325606 ,என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.