பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் கவின் கலைமன்றத் துவக்கவிழா

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் கவின் கலை மன்ற துவக்கவிழா நடந்தது.

கல்லூரி செயலாளர் அருள்தந்தை அந்தோணி சாமி தலைமை வகித்தார். கவின் கலை மன்றத் தலைவர்கள் பேராசிரியர் பிராங்கோ, பேராசிரியை ரெக்ஸி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி அனுஷா வரவேற்றார். கவின் கலைமன்ற புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. செயலராக இசக்கிராஜ், இணை செயலளராக அனுசுயா, ரம்யா ஆகியோர் பதவி ஏற்றனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மன்றத்தினை துவக்கி வைத்துபேசினார். நிகழ்ச்சியில் இராமசந்திரன் உள்பட பலர் பேசினர். மாணவி அனுஷியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

மாணவி ரம்யா நன்றி கூறினார்.