சென்னை எக்மோர் அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூரில்

சென்னை எக்மோர் அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்த பொருள்கள் மிகச்சிறப்பாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நுழைவு கட்டணம் ரூ15 தான். மாலை 5.30மணிக்குள் பார்த்து விடவேண்டும். உள்ளே உள்ள பொருள்களை படமெடுக்க வேண்டுமென்றால் கட்டணம் ரூ250 தான். அனைவருக்கும் நல்லதொரு வாய்ப்பு மிக அருமையாக அருங்காட்சியகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நான் சென்ற நேரம் பெரம்பலூரை சேர்ந்த சதீஷ் என்ற ஆய்வு மாணவர் அங்கிருந்தார். என்னை பார்த்த வுடன் உங்களது “ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்” நூலை படித்துள்ளேன் என்றார். என்னை எப்படி அடையாளம் கண்டீர்கள் என்று கேட்ட போது, “யூடீயூப்பில் உங்களது ஆதிச்சநல்லூரில் பேட்டியை பார்த்தேன்” என்று கூறினார். அங்கிருந்த வழிகாட்டி முத்து குமார் அய்யா அவர்கள் எங்களுக்கு ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருள்கள் இருந்த வைப்பறைக்கு கூட்டி சென்றார். எழுத்தாளர் என்றவுடன் நன்கு உபசரித்தார். ஒரு காலத்தில் பூட்டி கிடந்த அருங்காட்சியகம் திறந்து இருப்பது என்னை பரவபடுத்தியது. நமது முன்னோர்கள் பயன்படுத்திய அபூர்வ அதிசய பொருள்களை கண்டு பெருமிதம் கொண்டேன்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் வெட்டவெளி பொட்டலாக கிடக்கும் இடத்தில் இவ்வளவு பெரிய ஆபூர்வ பொருள்கள் இருந்ததா என இங்கு வந்து பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். சென்னை சென்றால் அவசியம் இவ்விடத்துக்கு சென்று வாருங்கள்.காலையிலே சென்று விடுங்கள். ஒரு நாள் முழுவதும் அருங்காட்சியகம் பார்க்க நேரம் வேண்டும். எனவே ஒரு நாள் முழுவதையும் ஓதுக்கி அங்கே செல்லுங்கள். நான்பெற்ற இன்பம் தாங்களும் பெறுங்கள்.
ஆய்வு மாணவர் பெரம்பலூர் சதீஷ் அவர்களுக்கும் வழிகாட்டி முத்து குமாருக்கும் நன்றி.